செங்கடல் பகுதியில் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
செங்கடல் பகுதியில் நேற்று முன் தினம் இரவு சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழிதடத்தில் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர். இவற்றில் ஒரு வழி ட்ரான்கள், கப்பல்களை தாக்கும் 18 ஏவுகணைகள், பெருந்தொலைவில் பாயும் ஏவுகணைகள் அடங்கும். இந்த ஏவுகணைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இதில் எந்த கப்பலுக்கும் சேதம் ஏற்படவில்லை. உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றது கூறியுள்ளது. இந்த தாக்குதல் முறியடிப்பில் டெஸ்ட்ராயர் எனப்படும் போர்க்கப்பல்கள் மற்றும் எப் 18 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.
செங்கடல் பகுதியில் அமெரிக்காவுடன் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.