அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், தற்போது சொந்த நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் அமெரிக்கா திரும்புமாறு கல்லூரிகள் அறிவுறுத்திக் கொண்டுள்ளன.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 20-ந்தேதி, அவர் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், தற்போது சொந்த நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் அமெரிக்கா திரும்புமாறு கல்லூரிகள் அறிவுறுத்திக் கொண்டுள்ளன. டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றபின் சர்வதேச பயணங்களில் கட்டுப்பாடுகள் வரலாம் என்ற எதிர்ப்பார்ப்பினால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் 54% வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.