செங்கடலில் தாக்குதல் - ஹவுதிக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை

January 4, 2024

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இல்லை எனில் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சி குழு செங்கடலில் செல்லும் சர்வதேச கப்பல்களை தாக்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் அமெரிக்கா கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இதுவரை 23 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். சமீபத்தில் ஹவுதியின் மூன்று படகுகளை அமெரிக்க கடற்படை தாக்கி அழித்தது. இதில் பத்து கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு […]

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இல்லை எனில் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சி குழு செங்கடலில் செல்லும் சர்வதேச கப்பல்களை தாக்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் அமெரிக்கா கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இதுவரை 23 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். சமீபத்தில் ஹவுதியின் மூன்று படகுகளை அமெரிக்க கடற்படை தாக்கி அழித்தது. இதில் பத்து கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுப்போம் என்று ஹவுதி தெரிவித்தது.

இந்நிலையில் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இல்லை எனில் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு அதன் கூட்டணி நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எந்த விதமான பதிலடியில் அமெரிக்கா ஈடுபடும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியாது என அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு டென்மார்க், கனடா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu