ஈரான் - ரஷியா ராணுவ கூட்டு குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

December 10, 2022

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை, ஈரான் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஆழமான பாதுகாப்பு கூட்டணி, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உதவுவதை வெளிக்காட்டுவதாக பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஈரான் பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இதைடுத்து ஈரானிய நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வெள்ளை மாளிகை அண்மையில் வெளியிட்டது. […]

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை, ஈரான் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஆழமான பாதுகாப்பு கூட்டணி, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உதவுவதை வெளிக்காட்டுவதாக பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஈரான் பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இதைடுத்து ஈரானிய நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வெள்ளை மாளிகை அண்மையில் வெளியிட்டது.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷியா, ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். வான் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஈரானுக்கு மேம்பட்ட ராணுவ உதவியை வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu