உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், " ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது படைகளை முதலில் உக்ரைனை விட்டு வெளியேற்ற வேண்டும். அதற்கு அடுத்தபடியாக ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும். இதுதான் சிறந்தது என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். இந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஜெலென்ஸ்கி தயாரா என்பதையும், அவை எப்படி இருக்கும் என்பதையும் அவரே தீர்மானிக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும், "உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து நாங்கள் ரஷ்யாவிடம் கலந்துரையாடப் போவதில்லை. ஏனெனில் அதிபர் ஜெலென்ஸ்கி அதற்குத் தயாராக இல்லை என்றார். அதோடு நாம் ஜெலென்ஸ்கியை இந்த விஷயத்தில் குறை கூற முடியாது. ஏனெனில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.














