அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் மேலவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 24 வயது அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர் போட்டியிடுகிறார். அவர், அமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிடும் ஜென் சி (1997 - 2012 வரை) தலைமுறையை சேர்ந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்.
அஸ்வின் ராமசாமியின் பெற்றோர் கடந்த 1990 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் அவர்களின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாட்டு கலாச்சாரங்களையும் கற்று வளர்ந்த அஸ்வின் ராமசாமி, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்துள்ளார். ஒட்டுமொத்த இளைஞர்களின் குரல் ஆகவும், தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டும், அவர் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அவர் ஜார்ஜியா மாகாணத்தின் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் சட்ட பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.