ஐசிசி 2024 ஆண்டிற்கான ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கான தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக டி20 கிரிக்கெட் போட்டி ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கான தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கிரிக்கெட் எனது வாழ்வில் ஒரு அங்கமாகும். விளையாட்டு போட்டிகள் எப்போதும் இந்த மண்ணில் சிறந்த இடத்தை கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தனக்கு ஒரு பதவி கிடைக்க பெற்றுள்ளதில் மகிழ்ச்சி அடைவதாவும், பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.














