மத்திய ரிசர்வ் வங்கி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏடிஎம் களில் ரொக்க பணத்தை யுபிஐ மூலமாக செலுத்தலாம்.
இன்று மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை மாநாடு நடைபெற்றது. அதன் பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, யுபிஐ பரிவர்த்தனைகளில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி, ஏடிஎம்களில் பணம் செலுத்துவதற்கு யுபிஐ பயன்படுத்தப்படும். “தற்போதைய நிலவரப்படி, டெபிட் கார்டு பயன்படுத்தியே வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர். இனிமேல், ஏடிஎம்களில் யு பி ஐ மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்படுவதால், வாடிக்கையாளர்களின் நேரம் மற்றும் உழைப்பு பெருமளவு சேமிப்பாகும். இந்த யுபிஐ வசதியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டி முறைகள் விரைவில் வெளியிடப்படும்” - இவ்வாறு அவர் கூறினார்.














