இணைய வர்த்தகத்தில் கார் விற்பனையை தொடங்கும் நோக்கில், அமேசான் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்துள்ளது.
வரும் 2024 ஆண்டில், உலகில் முதல் முறையாக, அமேசான் தளத்தில் கார் விற்பனை தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, அமெரிக்க பயனர்களுக்கு கார் விற்பனை செய்யப்படுகிறது. பயனர்கள், தங்களுக்கு பிடித்த கார் மாடல், நிறம் போன்றவற்றை இணையதளத்தில் தேர்வு செய்து, காருக்கான கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம். அதன் பின்னர், பயனர்கள் தேர்வு செய்த டீலர்கள் மூலம் காரை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், டோர் டெலிவரி முறையில் காரை பெறும் அம்சமும் கொடுக்கப்படுகிறது. இதற்காக, ஹூண்டாய் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள அமேசான் நிறுவனம், இந்த திட்டத்தின் மூலம், இரு நிறுவனங்களுக்கும் வலிமை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.