உத்தரப்பிரதேசம் ஜான்சி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசம், ஜான்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபாய் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் நேற்று இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர். மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதனால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி 2 லட்சம் நிவாரணத்தை அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதுபோல் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்