உத்தரகண்ட் மேகவெடிப்பால் கடும் பாதிப்பு

September 17, 2025

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், மேகவெடிப்பு நிகழ்ந்ததால் சஹஸ்த்ரதாரா பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. கடைகளும் சிறிய கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் மேகவெடிப்பு பேரிடரில் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேரைத் தேடும் […]

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், மேகவெடிப்பு நிகழ்ந்ததால் சஹஸ்த்ரதாரா பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. கடைகளும் சிறிய கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் மேகவெடிப்பு பேரிடரில் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் 85 பேர் உயிரிழந்ததாகவும், 94 பேர் காணாமல் போனதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு ரூ.1200 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது. மேலும், வெள்ள சேதத்தைக் கணக்கிட்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். மழை நின்ற பின்னரே முழுமையான சேத விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu