V-Guard Industries நிறுவனம், சமையல் உபகரணங்களை விற்கும் Sunflame Enterprises நிறுவனத்தின் 100% பங்குகளை கையகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணப்பரிமாற்றம் ஏதுமின்றி, 660 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மொத்தமாக வாங்குவதன் மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. வரும் ஜனவரி மாதத்தில் இந்த ஒப்பந்தம் முழுமை பெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய வீ-கார்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மிதுன் சித்திலப்பள்ளி, “வீ-கார்டு நிறுவனத்தின் வர்த்தகப் பயணத்தில் இது முக்கியமான மைல்கல்” என்றார். சன்பிளேம் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி கே எல் வர்மா, “வீ-கார்டு நிறுவனத்துடன் இணைந்து, சன்பிளேம் நிறுவனம் கூடுதல் உயரங்களை எட்டும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.