சென்னையில் ‘வைகை வளாகம்’ : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

December 19, 2022

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் புதிதாக உருவாக உள்ள வைகை வளாகத்திற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘வைகை’ எனும் புதிய அலுவலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி, பூமி பூஜையில் பங்கேற்றார். ஒரு லட்சத்து எழுபதாயிரம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், 9 தளங்கள் கூடிய கட்டிடமாக ரூ. 91.64 கோடியில் இந்த வளாகம் 2024ம் ஆண்டுக்குள் […]

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் புதிதாக உருவாக உள்ள வைகை வளாகத்திற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘வைகை’ எனும் புதிய அலுவலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி, பூமி பூஜையில் பங்கேற்றார். ஒரு லட்சத்து எழுபதாயிரம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், 9 தளங்கள் கூடிய கட்டிடமாக ரூ. 91.64 கோடியில் இந்த வளாகம் 2024ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா தொழிற்துறையினருக்கு வசதிகளை மேம்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டதன் அடையாளமாக இந்த வளாகம் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற முன்யோசனையுடன் ஒரு அலுவலக வளாகம் கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக கட்டப்படவுள்ள வைகை வளாகம் வருங்காலத்தில் கட்டப்பட உள்ள அரசாங்க கட்டடங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu