தெலங்கானாவில் செகந்திராபாத்-திருப்பதி இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் மோடி 8ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
தெலங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஐதராபாத் தகவல் தொழில்நுட்ப நகரத்தையும், வெங்கடேசப் பெருமாள் உறையும் திருப்பதியையும் இணைக்கும் செகந்திராபாத்- திருப்பதி வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கடந்த 3 மாதம் என்னும் குறுகிய காலத்தில் தெலங்கானாவில் தொடங்கப்படும் 2-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். இந்த ரயில் இரு நகரங்களுக்கும் இடையே குறைந்தப்பட்சம் மூன்றரை மணி பயண நேரத்தை குறைக்கும். மேலும் பிரதமர் மோடி ரூ.7,850 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.