தமிழகத்தில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான முன்பதிவு 30-ஆம் தேதி வரை முடிந்துள்ளது. நெல்லை - சென்னை இடையே தொடங்கப்பட்ட வந்தை பாரத் ரயில் 12:30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர்,மதுரை, திண்டுக்கல்,திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்பட உள்ளது. மேலும் சென்னை எழும்பூர்க்கு 10.25 மணிக்கு சென்றடையும்.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட உள்ள ரயில்களின் சேவை இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் இதற்கான பயண சீட்டு முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அனைத்து இருக்கை வசதி, சொகுசு பெட்டி இருக்கைகளும் முப்பதாம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பண்டிகை தினங்களில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இயக்கப்படும் ரயில் இருக்கைகளும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் ரயில்களின் இருக்கைகள் குறைந்த அளவிலேயே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














