வந்தே பாரத் ரயில்கள் - ஐ.சி.எஃப்.-ல் ரூ.25.50 கோடியில் 2-ம் கட்டமைப்பு பணிகள்

March 21, 2023

வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பை அதிகரிக்கும் வகையில், சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் ரூ.25.50 கோடியில் 2-ம் கட்டமைப்பு பணி விரைவில் தொடங்க உள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இந்த ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில்களை சென்னை ஐசிஎஃப் தவிர, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, பஞ்சாப் மாநிலம் கபுர்தலா ஆகிய இடங்களில் உள்ள ரயில் […]

வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பை அதிகரிக்கும் வகையில், சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் ரூ.25.50 கோடியில் 2-ம் கட்டமைப்பு பணி விரைவில் தொடங்க உள்ளது.

நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இந்த ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில்களை சென்னை ஐசிஎஃப் தவிர, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, பஞ்சாப் மாநிலம் கபுர்தலா ஆகிய இடங்களில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஐசிஎஃப்-ல் 2-வது கட்டமாக ரூ.25.50 கோடி மதிப்பில் கட்டமைப்பு மேம்படுத்த உள்ளது. 400 மீட்டர் துாரத்துக்கு தலா 2 ரயில் பாதைகள், 76 மீட்டர் துாரத்துக்கு ‘பிட்லைன்’ அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu