'வந்தே பாரத்' ரயில்களுக்கு அடுத்தபடியாக இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் 'வந்தே மெட்ரோ' ரயில்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹைதராபாதில் அவர் கூறுகையில், வந்தே பாரத் ரயில்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து அதிவிரைவு வந்தே மெட்ரோ ரயில்களை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ரயில்வே அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டார். இதற்காக இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 12 முதல் 16 வாரங்களில் வந்தே மெட்ரோ ரயில்களுக்கான முன்மாதிரியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
அதற்கடுத்த ஒரு ஆண்டுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு புதிய ரயில்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும். இந்த ரயில்கள் 100 கி.மீ., இடையில் அமைந்துள்ள நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதால் உள்ளூர் பயணியருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.