வரலாற்றில் முதல் முறையாக, மாற்றுப் பாலினம் கொண்டவர்களும் கத்தோலிக்க ஞானஸ்நானம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிகன் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. அதன்படி, மாற்றுப் பாலினத்தை சேர்ந்தவர்கள், தமக்குத்தாமே ஞான பெற்றோராக இருந்து, ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், கத்தோலிக்க திருமணங்களில் அவர்கள் சாட்சிகளாக இருக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.மாற்றுப் பாலினத்தை சேர்ந்தவர்கள் கத்தோலிக்க திருச்சபைகளில் ஞானஸ்நானம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ள அதே சமயத்தில், திருச்சபை நம்பிக்கைகளில் இது சார்ந்த மாற்றங்களும் குழப்பங்களும் ஏற்படக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளூர் பாதிரியார் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, கத்தோலிக்க திருமணங்களில் மாற்றுப் பாலினத்தை சேர்ந்தவர்கள் சாட்சிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிகன் குழு வெளியிட்டுள்ள இந்த செய்தி, சர்வதேச அளவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.














