பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய கனிம சுரங்கங்களை வேதாந்தா குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்திய அரசு வெளியிட்ட நேரடி மின் ஏலம் மூலம் இந்த சுரங்கங்களை வேதாந்தா குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 14 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் கொல்லரஹட்டி மல்லனஹள்ளி பிளாக் சுரங்கம் மற்றும் பீஹார் ஜென்சனா பிளாக் சுரங்கம் ஆகியவற்றுக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது. இவை முறையே ஜி4 மற்றும் ஜி3 ஆகிய ஆய்வு நிலைகளில் உள்ள சுரங்கங்கள் ஆகும். வேதாந்தா குழுமம் பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த இரு சுரங்கங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. கர்நாடகா சுரங்கம் 1238.122 ஹெக்டேர் பரப்பளவிலும், பீகார் சுரங்கம் 788.85 பரப்பளவிலும் உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.