வேதாந்தா குழுமத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 27.2% வீழ்ச்சி அடைந்து 1369 கோடி ரூபாய் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வேதாந்தா குழுமத்தின் ஒட்டுமொத்த வருவாய் 36093 கோடி ஆகும். இதுவே முந்தைய ஆண்டில் 38635 ரூபாய் ஆக இருந்தது. அதன்படி, 2024ம் நிதியாண்டில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 141793 கோடியாகவும் எபிட்டா மதிப்பு 36455 கோடியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் வேதாந்தா குழுமத்தின் எபிட்டா மார்ஜின் 30% ஆக உயர்ந்துள்ளது. மேலும், வேதாந்தா குழுமத்தின் மொத்த கடன் மதிப்பு 71759 கோடியாக சொல்லப்பட்டுள்ளது.