வேதாந்தா குழுமம், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த மார்ச் 10ம் தேதி திருப்பி செலுத்தி உள்ளது.
கடந்த செப்டம்பர் 8ம் தேதி, ட்வின் ஸ்டார் ஹோல்டிங் லிமிடெட், வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட், வெல்டர் டிரேடிங் லிமிடெட் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (சிங்கப்பூர்) ஆகியவை இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டன. 100 மில்லியன் டாலர் மதிப்பிலான கட்டமைப்புக்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, இந்தத் தொகையை, வேதாந்தா நிறுவனம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக்கு திருப்பி செலுத்தி உள்ளது. இதன் மூலம், தனது அனைத்து நிதி தொடர்புகளையும், குறித்த நேரத்தில் நிறைவேற்றி வருவதாக வேதாந்தா குழுமம் கூறியுள்ளது.














