இன்றைய வர்த்தக நாளில் வேதாந்தா குழுமத்தின் பங்கு மதிப்பு ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் வேதாந்தா குழுமத்தின் பங்கு மதிப்பு 413.8 ரூபாய் ஆக இருந்தது.
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், அடுத்த 4 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் இதர வர்த்தகப் பிரிவுகள் அனைத்திலும் முதலீடுகளை அதிகரிப்பதாக கூறியுள்ளார். ஸ்மார்ட்போன், லேப்டாப் ஸ்க்ரீன் உள்ளிட்டவைகளுக்கு தேவைப்படும் செமி கண்டக்டர் மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதில் கூடுதல் முதலீடுகள் செய்யப்படும் என கூறியுள்ளார். இதன் விளைவாக, வேதாந்தா குழுமத்தின் பங்குகள் இன்று உயர்ந்துள்ளன.