வேதாந்தா குழுமத்தை சேர்ந்த கிளை நிறுவனம் ஒன்று வேதாந்தா குழுமத்தின் பங்குகளை விற்க உள்ளது. நிறுவனத்தின் கடன் சுமையை குறைப்பதற்காக பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் களமிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனம் Finsider International Company Ltd ஆகும். இந்த நிறுவனம், வேதாந்தா குழுமத்தில் தனக்கு இருக்கும் 2.6% பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. ஏற்கனவே, கடந்த பிப்ரவரியில் 1.76% வேதாந்தா பங்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற பிளாக் டீலில் 18.5 கோடி வேதாந்தா பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வேதாந்தாவின் மொத்த பொது பங்களிப்பில் 4.8% ஆகும். இதன் மதிப்பு 7968 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பங்கு 440 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.