வரத்து குறைவால் சின்ன வெங்காயம் ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.70க்கு விற்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது அதன் விலை ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. சில வெளி மார்க்கெட்டுகளிலும் அதன் விலை ரூ.150 வரை சென்றுள்ளது. மேலும், பெய்து வரும் மழையால் பருவம் குறைந்துள்ள காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ரூ.10- ரூ.20 வரை அதிகரித்துள்ளது. முருங்கைக்காய் ரூ.150, பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ரூ.80, ஊட்டி கேரட் மற்றும் பீட்ரூட் ரூ.70 ஆகிய விலைகளுக்கு விற்கப்படுகின்றன. இதோடு, தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20-25 ஆக உள்ளது.