காய்கறிகள் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்வு

October 26, 2022

இந்தியாவில் 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ எளிய வகை காய்கறிகள், தற்போது 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. அதிகமான மழைப்பொழிவு மற்றும் அதனால் ஏற்பட்ட பயிர் சேதம் ஆகியவற்றின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில வணிகர்கள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து விலை ஏற்றம் ஆகியவையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், அதிகரித்து வரும் உணவுப் […]

இந்தியாவில் 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ எளிய வகை காய்கறிகள், தற்போது 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. அதிகமான மழைப்பொழிவு மற்றும் அதனால் ஏற்பட்ட பயிர் சேதம் ஆகியவற்றின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில வணிகர்கள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து விலை ஏற்றம் ஆகியவையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கம், நுகர்வோர், வர்த்தகர்கள், விவசாயிகள் என அனைவரையும் பாதித்துள்ளது. மேலும், பருவ மழை பொய்த்தது மற்றும் உலக அளவில் எரிவாயு விலை ஏற்றம் ஆகியவை இதனை மேலும் தீவிரமடைய செய்துள்ளன.

கடந்த வாரத்தில், இந்தியாவில் பரவலாக அனைத்து இடங்களிலும் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால், அறுவடைக்கு காத்திருந்த காய்கறி பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்தன. பல காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, குறைந்த அளவே காய்கறிகள் சந்தைக்கு வந்துள்ளன. மேலும் 20 முதல் 30% காய்கறிகள் மட்டுமே உயர் தரத்தில் உள்ளன. எனவே, விலைகளில் கடும் உயர்வு தென்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தக்காளி ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை மொத்த சந்தையிலும், 60 முதல் 80 ரூபாய் வரை சில்லறை சந்தையிலும் விற்கப்படுகிறது. மேலும், நவம்பர் மாத இறுதியில், புதிய காய்கறிகள் சந்தைக்கு வரும் பொழுது இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளியைப் போலவே பிற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கீரை கட்டுகள் 50 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. வெண்டைக்காய் ஒரு கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பீன்ஸ் 160 ரூபாய்க்கும், கோவைக்காய் 120 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. பொதுவாக, 16 முதல் 18 ரூபாய் வரை விற்கப்படும் காலிபிளவர் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் ஒன்று 4 முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு, பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மேலும், அதன் விளைவாக ஏற்பட்டுள்ள காய்கறி விலை உயர்வால், லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில், நகர்ப்புற பண வீக்கத்தை விட கிராமப்புற பணவீக்கம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, மாநில அரசுகளுக்கு இந்த நிலையை சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது. தானியங்களை பொறுத்தவரை, அரசு கிடங்குகளில், போதிய அளவு இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu