இந்தியாவில், வாகனங்களின் பிப்ரவரி மாத சில்லறை விற்பனை 16% உயர்ந்துள்ளதாக வாகன டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இரட்டை இலக்க வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதால் டீலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பயணிகள் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், மொத்தமாக 1775424 எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், இருசக்கர வாகனங்கள் விற்பனை 15%, மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 81%, சரக்கு வாகனங்கள் விற்பனை 17% உயர்வை பதிவு செய்துள்ளன. சரக்கு வாகனங்கள் விற்பனை 79027 எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிராக்டர் விற்பனை 14% உயர்ந்து, 68988 எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.