வேளாங்கண்ணியில்- 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

August 24, 2023

வேளாங்கண்ணியில் புனித அன்னை ஆரோக்கியமாத ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேளாங்கண்ணியில் புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இங்கு தற்போது திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த திருவிழாவிற்காக ஆண்டுதோறும் சென்னை, பெங்களூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோல் […]

வேளாங்கண்ணியில் புனித அன்னை ஆரோக்கியமாத ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வேளாங்கண்ணியில் புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இங்கு தற்போது திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த திருவிழாவிற்காக ஆண்டுதோறும் சென்னை, பெங்களூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கூடுதலாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்தும் மொத்தம் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu