வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி

July 29, 2024

வெனிசுலா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் எட்மின்டோ மற்றும் மதுரோவுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. நிக்கோலஸ் மதுரோ 51.2 சதவீத வாக்குகள் பெற்றார். எட்மன்ட் 44.2 சதவீத வாக்குகள் பெற்றார். இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இந்த முடிவுகளை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. 70% வாக்குகளை அவர்கள் தான் பெற்றதாக கூறி வருகின்றனர். […]

வெனிசுலா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் எட்மின்டோ மற்றும் மதுரோவுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. நிக்கோலஸ் மதுரோ 51.2 சதவீத வாக்குகள் பெற்றார். எட்மன்ட் 44.2 சதவீத வாக்குகள் பெற்றார். இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் இந்த முடிவுகளை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. 70% வாக்குகளை அவர்கள் தான் பெற்றதாக கூறி வருகின்றனர். தேர்தல் ஆணையம் மதுரோவுக்கு விசுவாசமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தேர்தல் முடிவு மோசடியானது என்று கோஸ்டாரிக்கா அதிபர் ரோட்டரிக்கோ விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் முடிவை நம்ப முடியவில்லை என்று சிலி அதிபர் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த தூதரை திரும்ப அழைத்ததாக பெரு நாடு கூறியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வெனிசுலா வாக்காளர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிலிங்கன் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu