சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த வெனிஸ் நகரத்தின் நிர்வாகம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
இத்தாலியில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரம் வெனிஸ். இந்நகரம் கலை கட்டுமானத்திற்கும் ஏரிகளால் சூழப்பட்ட இயற்கை அமைப்புக்கும் பிரசித்தி பெற்றது. இந்த நகரில் படகு போக்குவரத்து முக்கிய போக்குவரத்து அம்சமாக உள்ளது. இதனை காண வெளிநாட்டினர் பலர் இங்கு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த இந்த நகரத்தின் நிர்வாகம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இந்த நகரை சுற்றிப் பார்க்க ஒரு நாள் கட்டணமாக 5 யூரோ ( 447 ரூபாய் ) வசூலிக்கப்பட உள்ளது. இதற்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீசன் நாட்களில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமும் உள்ளதாக நகர நிர்வாகம் கூறியுள்ளது. இந்த கட்டண முறையானது ஜூலை 14 வரை ஒரு சோதனை முயற்சியாக நடத்தப்படுகிறது. அந்நகரத்திலே தங்கும் பயணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.