நெருக்கமாக காணப்படும் நிலவு, வெள்ளி மற்றும் வியாழன் - அரிய வானியல் நிகழ்வு

February 20, 2023

நிலவு, வெள்ளி மற்றும் வியாழன் கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய வானியல் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில், வெள்ளி மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் 29 டிகிரி தொலைவு காணப்பட்டது. தற்போது, பிப்ரவரி 20ஆம் தேதி அன்று, 9 டிகிரி இடைவெளியில் 2 கிரகங்களும் மிக நெருக்கமாக காணப்படுகின்றன. மேலும், அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி, இரு கிரகங்களுக்கும் இடையிலான இடைவெளி வெறும் 2.3 டிகிரி அளவில் குறைய உள்ளது. மேலும், […]

நிலவு, வெள்ளி மற்றும் வியாழன் கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய வானியல் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில், வெள்ளி மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் 29 டிகிரி தொலைவு காணப்பட்டது. தற்போது, பிப்ரவரி 20ஆம் தேதி அன்று, 9 டிகிரி இடைவெளியில் 2 கிரகங்களும் மிக நெருக்கமாக காணப்படுகின்றன. மேலும், அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி, இரு கிரகங்களுக்கும் இடையிலான இடைவெளி வெறும் 2.3 டிகிரி அளவில் குறைய உள்ளது. மேலும், மார்ச் 1ம் தேதி, 0.52 டிகிரி இடைவெளியில் இரு கிரகங்களும் காணப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, பூமியிலிருந்து காணும் பொழுது, மிகவும் பிரகாசமாக தெரியும் சீரியஸ் நட்சத்திரத்தை விட வியாழன் கோள் 2 மடங்கு பிரகாசமானதாக தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், வெள்ளி கிரகம் வியாழனை விட 6 மடங்கு பிரகாசமாக தெரியும் என கூறப்பட்டுள்ளது. பைனாகுலர்கள் துணை கொண்டு இந்த அரிய வானியல் நிகழ்வை நாம் கண்டு களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிப்ரவரி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில், மாலை நேர வானில், வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் அருகில் நிலவும் காணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது, மிக அரிய வானியல் நிகழ்வாகச் சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu