வெள்ளி கிரகத்தில் ஆக்சிஜன் இருப்பது கண்டுபிடிப்பு

November 10, 2023

பூமியின் இரட்டைப் பிறவி என்று வெள்ளி கிரகம் அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தை பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெள்ளி கிரகத்தில் ஆக்சிஜன் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணு வடிவில் வெள்ளி கிரகத்தில் ஆக்சிஜன் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். போயிங் 747 எஸ்பி விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட இன்ஃப்ரா ரெட் தொலைநோக்கியின் மூலம், வெள்ளி கிரகத்தில் ஆக்சிஜன் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா மற்றும் ஜெர்மனியின் வானியல் மையம் ஆகியவை இணைந்து வெள்ளி கிரக […]

பூமியின் இரட்டைப் பிறவி என்று வெள்ளி கிரகம் அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தை பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெள்ளி கிரகத்தில் ஆக்சிஜன் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அணு வடிவில் வெள்ளி கிரகத்தில் ஆக்சிஜன் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். போயிங் 747 எஸ்பி விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட இன்ஃப்ரா ரெட் தொலைநோக்கியின் மூலம், வெள்ளி கிரகத்தில் ஆக்சிஜன் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா மற்றும் ஜெர்மனியின் வானியல் மையம் ஆகியவை இணைந்து வெள்ளி கிரக வளிமண்டலம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. அதில், வெள்ளி கிரகத்தின் இரு வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீனஸ் தரைபரப்பிலிருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில், ஆக்சிஜன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மைனஸ் 184 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் 256 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உள்ளதாக தெரியவந்துள்ளது. சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள், வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள அடர்த்தியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றில் ரசாயன மாற்றம் நிகழ்த்தி, ஆக்ஸிஜன் உருவாக்கத்திற்கு வழிவகுப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளி கிரகம் குறித்த ஆய்வில், ஆக்சிஜன் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu