ட்விட்டர் நிறுவனம், வெரிஃபைடு பயனர்களுக்கு முன்னிலை வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வெரிஃபைடு கணக்குகளுக்கு முன்னிலை வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விளக்கங்கள் இடம் பெறவில்லை.
ட்விட்டரில், ப்ளூ பேட்ச் சேவை, கட்டண அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்குகளில் இருந்து ஏப்ரல் 20ம் தேதி முதல் ப்ளூ பேட்ச் அகற்றப்பட்டது. ஆனால், ஒரு மில்லியன் ஃபாலோயர்களை கொண்டவர்களுக்கு ட்விட்டர் ப்ளூ சேவை மீண்டும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள், சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்கள் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு முதன்மையாக கிடைக்கும் என்ற பொருளில், எலான் மஸ்க் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.