பாம்பன் பாலத்தில் புதிய ரயில் பாலம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கப்பல்கள், பெரிய படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - ராமேஸ்வரம் தீவு பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த ரயில் பாதை 106 ஆண்டுகள் கடந்த நிலையில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி ரூபாய் 535 கோடி மதிப்பீட்டில் இரட்டை வழிதடத்தில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றதில் பாம்பன் ரயில் பாலத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்றொரு பகுதியில் இதற்கான வேலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தாக்குப்பாலம் கால்வாயில் கப்பல்கள், பெரிய படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதி துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களும், குஜராத், கோவை, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆள்கடல் மீன்பிடி படகுகள், புதிய தூக்கு பாலம் பொருத்தும் பணிகள் நிறைவடையும் வரை பயன்படுத்தப்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது