வயாகாம் 18 - விளையாட்டு சம்பந்தப்பட்ட ஒலிபரப்புகளை ஜியோ சினிமாவுக்கு மாற்றுகிறது

October 6, 2022

ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிவி 18 மற்றும் அமெரிக்காவின் பாரமௌன்ட் குளோபல் ஆகிய நிறுவனங்களின் கூட்டாக வயாகாம் 18 செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், வூட் (voot) செயலி மற்றும் அதன் ஓடிடி தளத்தில் விளையாட்டு போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பி வந்தது. தற்போது, விளையாட்டு சம்பந்தப்பட்ட அனைத்து ஒலிபரப்புகளையும் ஜியோ சினிமா தளத்திற்கு மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், வரும் நவம்பர் மாதம், கத்தாரில் நடைபெற உள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடங்கி, அனைத்து விளையாட்டு […]

ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிவி 18 மற்றும் அமெரிக்காவின் பாரமௌன்ட் குளோபல் ஆகிய நிறுவனங்களின் கூட்டாக வயாகாம் 18 செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், வூட் (voot) செயலி மற்றும் அதன் ஓடிடி தளத்தில் விளையாட்டு போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பி வந்தது. தற்போது, விளையாட்டு சம்பந்தப்பட்ட அனைத்து ஒலிபரப்புகளையும் ஜியோ சினிமா தளத்திற்கு மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், வரும் நவம்பர் மாதம், கத்தாரில் நடைபெற உள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடங்கி, அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஜியோ சினிமா தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து போட்டிகள், டென்னிஸ் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் தொடர்கள் போன்றவை இனிமேல் ஜியோ சினிமாவில் வெளியாகும். ஆனால், இந்தியாவில் பெரிதும் விரும்பப்படும் விளையாட்டுத் தொடரான ‘ஐபிஎல்’ ஒளிபரப்பு குறித்த முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை வயாகாம் 18 நிறுவனத்தின் விளையாட்டு பிரிவு தலைவர் அணில் ஜெயராஜ் தெரிவித்தார். மேலும், ஜியோ சினிமா செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து, அதில் விளையாட்டு போட்டிகளை இனிமேல் கண்டு ரசிக்கலாம் என்று கூறினார். மேலும், ஜியோ சினிமா செயலி, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், டிவி போன்ற அனைத்து இயங்கு தளங்களிலும் செயல்படும் என்பதால் இந்த தளத்தில் போட்டிகளை ஒளிபரப்புவது பெருவாரியான மக்களைச் சென்றடையும் என்று தெரிவித்தார்.

அத்துடன், “ஜியோ சினிமா தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் பொழுது, அதனை பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஜியோ சினிமா செயலியின் மூலம் விளையாட்டுப் போட்டிகளை காணும் பொழுது, மைதானத்தில் உள்ள பல்வேறு கேமரா கோணங்களிலும் போட்டிகளை கண்டு ரசிக்கும் அம்சம் கொடுக்கப்பட உள்ளது” என்று அணில் ஜெயராஜ் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஜியோ சினிமா செயலி, இதுவரை 400 மில்லியன் பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. எனவே, இந்த தளத்தில் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்புவது பெருவாரியான மக்களைச் சென்றடையும். அதனால், இந்த தளம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வயாகாம் 18 நிறுவனம், அடுத்த 5 ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை வென்றுள்ளது. ஐபில் மிகப்பெரிய வணிகச் சந்தை. எனவே, இந்தத் தொடரை ஒளிபரப்பும் தளம் குறித்து, பொறுமையாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறினார். கடந்த மாதம், வயாகாம் 18 நிறுவனத்துடன் ஜியோ சினிமாவை இணைக்க, காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா (சிசிஐ) ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu