வைஸ் ஊடக நிறுவனம் கடந்த வருடம் திவால் நடவடிக்கைகளுக்கு விண்ணப்பித்தது. தற்போது, வைஸ் ஊடகத்தில் இனிமேல் எந்த விதமான செய்திகளும் பிரசுரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அடுத்த வாரத்தில் வைஸ் மீடியா நிறுவனத்தில் வேலை செய்த 900 பேர் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ப்ரூஸ் டிக்சன், நீக்கப்படும் பணியாளர்களுக்கு மெமோ அனுப்பியதாக கூறப்படுகிறது. கடந்த 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வைஸ் நிறுவனம், தற்போது திவாலாகி, ஊடக துறையினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. போதிய வருவாய் இல்லாமல் நிறுவனம் திவால் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்தடுத்த வாரங்களில் மேலும் பணி நீக்கங்கள் நிகழும் என கூறப்படுகிறது.














