மொத்த எம்.பி.க்களில் பெரும்பாலோர் வாக்களிப்பு முடித்தனர்; வெற்றி பெற NDA வேட்பாளர் வாய்ப்பு அதிகம்.
தில்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. காலை 10 மணி முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொத்தம் 782 வாக்குகள் பதிவு செய்ய வேண்டிய நிலையில், 20 எம்.பி.க்கள் வாக்களிக்காமல் விட்டுள்ளனர். 762 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.
வெற்றி பெற குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால், அக்கூட்டணியின் வேட்பாளரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டுள்ளனர். பிஜு ஜனதா தளம் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் வாக்களிப்பை புறக்கணித்தன. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் இன்றே அறிவிக்கப்படவுள்ளன.














