வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி மற்றும் இத்தாலிய வீரர்கள் மோதினர்.
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார். அவர் 6-2, 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். மேலும், ரஷியாவின் கரன் கச்சனாவ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.