தமிழகம் முழுவதும் விஜய் நூலகத் திட்டம் தொடக்கம்

November 17, 2023

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.நடிகர் விஜய் சமூக பணிகளின் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கி வைத்தார். அது சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடித்தட்டு மக்களின் தேவைக்காக சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டா மாற்றம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீதிமன்ற வழக்கு […]

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.நடிகர் விஜய் சமூக பணிகளின் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கி வைத்தார். அது சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடித்தட்டு மக்களின் தேவைக்காக சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டா மாற்றம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீதிமன்ற வழக்கு குறித்த சட்ட உதவிகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அடுத்த அதிரடி திட்டமாக மாணவ மாணவிகளின் வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு திறனை மேம்படுத்த தமிழகம் முழுவதும் தளபதி விஜய் நூலகம் என்ற பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக நாளை 11 இடங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் ஆலோசனைப்படி 234 தொகுதிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu