தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - 2 கட்டங்களாக வழங்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு முதல் இதனை வழங்கி வருகிறார். இந்த வருடம், 2 கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்குவதை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் நடத்தி வருகிறது. இந்த வருடத்தில், […]

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு முதல் இதனை வழங்கி வருகிறார். இந்த வருடம், 2 கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்குவதை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் நடத்தி வருகிறது. இந்த வருடத்தில், 2 கட்டங்களாக நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், நீலகிரி, புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு ஜூன் 28ஆம் தேதியும், சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஜூலை 3ம் தேதியும், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu