டென்மார்க் இங்கிலாந்து இடையே உலகின் நீளமான மின்சார கேபிள்

December 22, 2023

உலகின் மிக நீளமான மின்சார கேபிள், டென்மார்க் - இங்கிலாந்து நாடுகளை இணைக்கும் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. டென்மார்க் - பிரிட்டன் இடையில் உள்ள 765 கிலோ மீட்டர் தூர கடற்பரப்பில் ‘வைக்கிங் லிங்க்’ என்ற பெயரில் மின்சார கேபிள் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் கேபிள் 40 கிலோ எடையுடன், அதிக பாதுகாப்பாக, கடலுக்கடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் உள்ள காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின் ஆற்றலை இந்த கேபிள் கடத்திச் செல்ல உள்ளது. அதன்படி, காற்று அதிகமாக […]

உலகின் மிக நீளமான மின்சார கேபிள், டென்மார்க் - இங்கிலாந்து நாடுகளை இணைக்கும் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் - பிரிட்டன் இடையில் உள்ள 765 கிலோ மீட்டர் தூர கடற்பரப்பில் ‘வைக்கிங் லிங்க்’ என்ற பெயரில் மின்சார கேபிள் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் கேபிள் 40 கிலோ எடையுடன், அதிக பாதுகாப்பாக, கடலுக்கடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் உள்ள காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின் ஆற்றலை இந்த கேபிள் கடத்திச் செல்ல உள்ளது. அதன்படி, காற்று அதிகமாக இருக்கும் நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு மின்சாரம் பாய உள்ளது. இரு நாடுகளிலும் உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முறையாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய வைகிங் லிங்க் கட்டுமானம், ‘கடலுக்கு அடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு அதிவேக நெடுஞ்சாலை’ என கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 19000 கோடி ரூபாய் செலவில் இந்த கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu