டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைச் சேர்மனாக, முன்னாள் துணைச் சேர்மன் விக்ரம் கிர்லோஸ்கரின் மகள் மானசி டாடா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில், விக்ரம் கிர்லோஸ்கர் மாரடைப்பு காரணமாக காலமானார். அதைத்தொடர்ந்து, நிர்வாகக் குழுவினரின் ஒப்புதலுடன், அவரது மகள் துணைச் சேர்மன் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தலைமைப் பொறுப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானசி டாடா, ஏற்கனவே டொயோட்டா கிர்லோஸ்கரின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நியமனம் குறித்து பேசிய டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மசக்காசு யோஷிமோரா, "மானசி டாடாவின் இளம் வர்த்தகத் தலைமையில், அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் புதிய பாதையில் நிறுவனம் முன்னேறும்" என்று கூறியுள்ளார். மேலும், மானசி டாடா, டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனத்தின் துணை சேர்மனாகவும் செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.