விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேற்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. வாக்குப்பதிவுக்கு முன்பாக இயந்திரங்கள் செயல்பாடு ஆகியவை அதிகாலை 5.30 மணியிலிருந்து 6.30 மணி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள 276 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்ரவாண்டி இடைத்தேர்தல் நேற்று மாலை 6 மணி ஆறு மணியுடன் முடிவடைந்த நிலையில் அங்கு 82.48 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.