சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் முதல் தாளங்குப்பம் வரை உள்ள 33 மீனவ கிராம மக்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எண்ணூர் பெரிய குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட அமோனிய வாயு வெளியேற்றத்தால் ஊர் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இதனை தொடர்ந்து உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் இதனை நிரந்தரமாக மூட வேண்டும் என எண்ணூரை சுற்றி உள்ள கிராம மக்கள் 42 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது எண்ணூர் முதல் தாழங்குப்பம் வரையில் உள்ள 33 மீனவ கிராம மக்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.ர் இதனால் அப்பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன