உக்ரைன் அணை உடைந்ததால் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

June 7, 2023

உக்ரைன் அணை மீது நடத்திய தாக்குதலில் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உக்ரைனின் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் […]

உக்ரைன் அணை மீது நடத்திய தாக்குதலில் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

உக்ரைனின் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu