விநாயகர் சதுர்த்தி விடுமுறை : ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு உயர்வு டங்கு உயர்வு

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இன்று மாலையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அனைத்து ரயில்களும் ஏற்கனவே நிரம்பிவிட்டன. அதனால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.1,900 ஆகவும், கோவைக்கு […]

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இன்று மாலையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

அனைத்து ரயில்களும் ஏற்கனவே நிரம்பிவிட்டன. அதனால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.1,900 ஆகவும், கோவைக்கு ரூ.2500 ஆகவும், நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.1,400 கட்டணமாக வசூலித்த நிலையில் தற்போது ரூ.2,500 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu