ஜோர்டான் சைல்ஸ் வெண்கல பதக்கத்திற்கான கோரிக்கை நிராகரிப்பு

August 13, 2024

அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை ஜோர்டான் சைல்ஸ் வென்ற வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டதாக அமெரிக்கா ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் 5 வது இடம் பிடித்த சைல்ஸ், மேல்முறையீட்டை தொடர்ந்து 3 வது இடத்திற்கு முன்னேற்றப்பட்டார். ஆனால், விளையாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் (CAS), அனா பர்போசு மற்றும் சப்ரினா மனேகா-வோய்னாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதால், அவரது வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அமெரிக்கா […]

அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை ஜோர்டான் சைல்ஸ் வென்ற வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டதாக அமெரிக்கா ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் 5 வது இடம் பிடித்த சைல்ஸ், மேல்முறையீட்டை தொடர்ந்து 3 வது இடத்திற்கு முன்னேற்றப்பட்டார். ஆனால், விளையாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் (CAS), அனா பர்போசு மற்றும் சப்ரினா மனேகா-வோய்னாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதால், அவரது வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அமெரிக்கா ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்த CAS தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu