வினிசியஸ் உலகின் சிறந்த ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவிக்கின்றது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற வீரர்களின் விருதுகள், தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகரமான தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக […]

வினிசியஸ் உலகின் சிறந்த ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவிக்கின்றது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற வீரர்களின் விருதுகள், தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகரமான தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில், பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுபவருமான வினிசியஸ் ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக அறிவிக்கப்பட்டார். 24 வயதான வினிசியஸ் ஜூனியர், 2016-ம் ஆண்டில் தொடங்கிய இந்த விருதை வென்ற முதல் பிரேசில் வீரராக பெருமையுடன் கொண்டாடினார். அவர் 48 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார். ஸ்பெயின் வீரர் ரோட்ரி 43 புள்ளிகளுடன் இரண்டாவது இடம், இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் 37 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பெற்றனர்.சிறந்த வீராங்கனையாக, ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்தும் 2-வது முறையாக விருதை வென்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu