மணிப்பூரில் மீண்டும் கலவரம், மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில், கடந்த ஒரு வருடமாக கலவரங்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குக்கி மற்றும் மெய்தேய் இனக்குழுக்களுக்கிடையே, அரசின் பழங்குடியின அந்தஸ்து முடிவால் இனக்கொலைகள் தீவிரமாகி, 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில், 13 பேர் காணாமல் போனதாக கூறப்பட்டது, அதில் 6 பேர் குழந்தைகள் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் 10 கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு, 20 CAPF கம்பெனிகளைக் கூடுதலாக மணிப்பூருக்கு அனுப்பி, 2000 வீரர்களை அனுப்புவதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது.














