உத்தரகாண்ட் மாநிலத்தில் முறைகேடாக மசூதி கட்டப்பட்டதால் அதனை இடிக்க முற்பட்டபோது திடீர் வன்முறை வெடித்தது.
உத்தரகாண்ட் மாநில ஹல்த்வானியில் உள்ள வான்புல் புரா பகுதியில் மதராசா மற்றும் அதை ஒட்டி முறைகேடாக மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தை நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்க முன் வந்தனர். இந்த கட்டிடத்தை இடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மூலம் முயன்ற போது அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் இருப்பினும் இடிக்கும் பணி தொடர்ந்ததால் திடீரென்று அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 பேர் சு உயிரிழந்து சுமார் 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து இங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறையாளர்களைசுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.