திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காலத்தில் சாமானிய பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் விஐபி தரிசனத்துக்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர், மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனுமன் ஜெயந்தி உற்சவம் வருகிற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை திருப்பதியில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 17-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம் திருமலையில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. மேலும் 22 ஆம் தேதி தரிகொண்ட வெங்கமாம்பாள் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது என திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி கூறியுள்ளார்.